சம்மாந்துறை பிரதேசத்தை மையப்படுத்தி இளம் ஊடக ஆர்வலர்கள் ஒன்றிணைந்த சம்மாந்துறை ஊடகவியலாளர் மையத்தின் நிர்வாக தெரிவு நேற்று (24) சாதிர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
இம் மையத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள்,அறிவிப்பாளர்கள் என இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் அங்கத்துவர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் முதலாவது ஆண்டிற்கான சம்மாந்துறை ஊடகவியலாளர் மையத்தின் தலைவராக ஏ.பி.எம் இம்ரான்,செயலாளராக ஏ.எம் ஹறூஸ்,உப செயலாளராக ஐ.எல்.எம் நாஸிம்,பொருளாளராக எ.ஆர்.எம்.ஜப்fறான்,அமைப்பாளராக சாதிர் ஏ ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.