சம்மாந்துறை - சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று (2024-05-08) இடம் பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக மனிதவளப் பிரிவு உத்தியோகத்தர் ஏ.எல்.எம். நிப்றாஸ் வளவாளராக கலந்து கொண்டு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.