Ads Area

காரைதீவு, மாளிகைக்காடு கடற்கரையோர பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றக்கோரிக்கை.

 

பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரக்கழிவுகள்  அதிகளவாக தேங்கியுள்ளதைக்காண முடிகின்றது.


குறிப்பாக, அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட நிலையில், இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் கரையொதுங்கி நிறைந்து காணப்படுகின்றன.


அம்பாறை மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளான  காரைதீவு, மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு அடையாளங்கள் தென்பட்டுள்ளன.


இக்கழிவுப்பரவலானது  கரையோர மீனவர்களது  மீன்பிடித்தொழிலுக்கு பெரும் சிரமங்களைக் கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்கி வருகின்றன.


எனவே, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe