சம்மாந்துறை மஜீட்புரத்தின் அஷ்ரப் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துமுகமான இலவச தொடர் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு மஜீட்புரம் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
அஷ்ரப் சன சமூக நிலையத்தின் தலைவர் எம்.எம்.தௌபிக் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி அவர்களும் அதிதிகளாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், சம்மாந்துறை பிரதேச சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.மஜீட், உள்ளூராட்சி உதவியாளர் திருமதி யூ.எஸ்.எம்.சதாத், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் செய்யித் உமர் மௌலானா மற்றும் மஜீட்புர வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.முஸ்ஸமில் jp, ஆசிரியர் யூ.எல்.எம்.சிபான் ஜும் ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.பீ.காசீம் பாவா இம்டாட் விளையாட்டு கழக பிரதிநிதிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பல்வேறு வெற்றிகளை அடைந்த மாணவர்களுக்கு பரிசீல்களும், இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப் அவர்களினால் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து மஜீட் புர வித்தியாலயம் மற்றும் அஷ்ரப் சனசமூக நிலையம் என்பவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான ஆவணமும் கையளிக்கப்பட்டது.