Ads Area

4600 மொபைல்கள்.. நேரலை வியூஸ்களை அதிகப்படுத்தி ரூ. 3 கோடி ஈட்டியவர் கைது.

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் நேரலை வீடியோக்களில் வியூஸ்களை அதிகப்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்தி நான்கே மாதங்களில் ரூ. 3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சீன செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 7 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 544 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.இவர் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை பயன்படுத்தி நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் நான்கே மாதங்களில் 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி வரை ஈட்டியுள்ளார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வாங், தனது நண்பர் பரிந்துரைத்த "பிரஷிங்" எனும் வழிமுறையை பின்பற்ற துவங்கி இருக்கிறார். நேரலையில் வியூவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, லைக், கமென்ட் செய்ய வைத்து உண்மையான பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே பிரஷிங் ஆகும்.


இந்த வழிமுறையை சாத்தியப்படுத்த வாங் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை வாங்கியுள்ளார். இவற்றை கிளவுட் சார்ந்த மென்பொருள் மூலம் கட்டுப்படுத்திய வாங் இதற்காக வி.பி.என். மற்றும் நெட்வொர்க் உபகரணங்களையும் வாங்கியுள்ளார். இவற்றைக் கொண்டு சில க்ளிக்குகளில் வாங் தனது 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களையும் ஒரே சமயத்தில் இயக்க முடிந்தது.


பிரஷிங் வழிமுறை கொண்டு வாங் நேரலையில் ஸ்டிரீம் செய்து பிரபலம் ஆக விரும்புவோரை குறிவைத்து நான்கே மாதங்களில்  4 லட்சத்து 15 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 46 லட்சத்து 55 ஆயிரத்து 571 வரை ஈட்ட முடிந்தது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe