(MJM.Mufassir)
நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்தின் Favona வில் உள்ள Samoan Church Hall இல் கடந்த வாரம் கறி விருந்து விழா கோலாகலமாக இடம்பெற்றது.
அரசன் NZ அறக்கட்டளையுடன் இணைந்து TANZI தமிழ்க் குழுமம் ஏற்பாடு செய்த இந்த விழாவில், தமிழ்நாட்டின் மாறுபட்ட மற்றும் சுவையான பல உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சௌந்திர ராஜன் பழனிசாமி, டாக்டர் லக்ஷ்மணன் செல்வநேசன், கிஷோர் குமார் குமாரசாமி மற்றும் டாக்டர் மகேஷ் பாபு மற்றும் பலர் தலைமையில் சுமார் 100 தன்னார்வலர்கள் இந்த மெகா நிகழ்வை நனவாக்க கடுமையாக உழைத்தனர்.
தளத்தில் தன்னார்வலர்களால் தயாரிக்கப்பட்ட நாற்பது வகை உணவுகள், சைவம் மற்றும் அசைவப் பிரிவுகளின் கீழ் பரிமாறப்பட்டன.
பல்வேறு பொழுதுபோக்கு- பாரம்பரிய மற்றும் நவீன இசை மற்றும் நடனம் ஆகியவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
குறித்த நிகழ்வில் இலங்கையின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் சட்டத்தரணியுமான SMM முஷாரப் இவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டதோடு நியுசிலாந்தின் இன சமூகங்கள் அமைச்சர் Melissa Lee MP (தேசிய கட்சி), சுங்க மற்றும் மூத்த அமைச்சர் Casey Costello (NZ First), Jenny Salesa MP, Dr Deborah Russell, Shanan Halbert, Lemauga Sosene, Ingrid Leary (தொழிலாளர் கட்சி), Dr. Parmjeet Parmar (ACT), ஆகியோர் உட்பட, Greg Fleming, Cameron Brewer (தேசிய கட்சி) ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#team_muszhaaraff