சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சுயதொழில் முயற்சியினை மேற்கொள்கின்ற பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள் 21.05.2024 ம் திகதி செவ்வாய்க்கிழமை சமூக சேவை உத்தியோகத்தர் அ. அகமட் சபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் S L.முஹம்மது ஹனிபா அவர்களினால் 17 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியேகத்தர் K.சிவகுமார் அவர்களும் சமூக சேவைப்பிரிவின் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - சமூக சேவை, ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இன்றைய நிகழ்வில் சுயதொழில் கொடுப்பனவை பெற்றுக்கொண்டவர்களுக்கு அவர்களின் வியாபார திறன்களை விருத்தி செய்வதற்காக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் S.H.M. செய்யது இர்பான் மௌலானா அவர்களினாலும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் தொடர்பாக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.M.நிப்ராஸ் அவர்களினாலும் கணக்கு பதிவுகள் தொடர்பாக M.A.M.மிஹ்லார் , அபிவிருத்தி உத்தியேகத்தர் அவர்களினாலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.