சம்மாந்துறை MOH பிரிவில் சமீப காலமாக அதிக தொழு நோயாளர்கள் இனங்கானப்பட்டு வருவதனைத் தொடர்ந்து, விசேட கள விஜயம் ஒன்றை ஏற்பாடு செய்து, செந்நெல் கிராமம் பகுதியில் வீடு வீடாகச் சென்று, 42 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேருக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன், ஆரம்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
உடலில் உள்ள உணர்வற்ற தழும்புகள் போன்றவை காணப்படுமிடத்து, உங்கள் பிரதேச சுகாதாரப் பரிசோதகரை, குடும்ப நல உத்தியோகத்தரை, சுகாதார வைத்திய அதிகாரியை நாடி ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.
அது ஒரு தொழுநோயாக இருக்குமிடத்து, 6 மாத கால மருந்து மாத்திரைகளை எடுக்குமிடத்து முற்றாக குணமடைந்துவிடும்.
தகவல் - சம்மாந்துறை சுகதார வைத்திய அதிகாரி காரியாலயம்.