Ads Area

ரணிலை ஆதரித்து கொழும்பில் கூடிய முஸ்லிம் தலைமைகள்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான செயற்றிட்டத்தை வகுக்கும் முக்கிய கூட்டமொன்று கடந்த 09.08.2024ம் திகதி கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெற்றது. 


இதன் போது ஆளுநர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், முன்னாள் நகர சபை, பிரதேச சபைத்தலைவர்கள், உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கௌரவ வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, லசந்த அழகியவண்ண, அலி சப்ரி ரஹீம், முஷாரப், காதர் மஸ்தான், இஷாக் ரஹ்மான் உற்பட  ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். 


இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் ரணில் விக்ரமசிங்கவின் கரங்களை ஏன் பலப்படுத்த வேண்டும்? என்ற நோக்கில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 


எதிர்வரும் ஆட்சியில் எப்படியான நன்மைகள் முஸ்லிம் சமூகத்திற்கு காத்திருக்கின்றதென்பதும் ஆராயப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe