நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது சைகை மொழிமூல வாக்காளர்களை எவ்வாறு அனுகுதல் மற்றும் சைகை மூலம் உரையாடலை மேற்கொண்டு வாக்களிக்க அறிவுறுத்தல் தொடர்பில் இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு சைகை மொழிமூல பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சைகை மொழியாளர் ஆர்.மாதுளன் மற்றும் சைகை மொழிபெயர்ப்பாளர் ஆர்.கீர்த்தனா ஆகியோர் கலந்துகொண்டு சைகை மொழி தொடர்பான பயிற்சியினை வழங்கினர்.
முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.ஜெ.ஜெனிற்றன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்டத்தின் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.