முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் JP அண்மையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஆதரிப்பதற்கு தீர்மானித்திருந்தார்.
நேற்று (25) மாலை அம்முடிவை மாற்றி சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசில் மீண்டும் இணைந்ததோடு, சஜித் பிரேமதாசாவினுடைய வெற்றியை உறுதி செய்வதற்காக கடுமையாகப் பாடுபடுவதாகவும் தொடர்ந்தும் முஸ்லீம் காங்கிரசினுடைய உறுப்பினராகவும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து முழுமையாகச் செயற்படுவதாகவும் உறுதியளித்து கட்சியில் இணைந்து கொண்டார்.
அத்தோடு, கட்சிக்கு விசுவாசமாகவும் கட்சியினுடைய செயற்பாடுகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் உறுதி வழங்கினார் .
முஸ்லீம் காங்கிரசினுடைய தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம் பரீட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத்தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வர்த்தகர் மக்பூல் ஹாஜியார், முன்னாள் நகர சபைத்தவிசாளர் அஸ்பர் ஜேபி, ஶ்ரீலங்கா ஹிரா பவுன்டேசன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, முன்னாள் நகர சபை உறுப்பினர் ஜவாஹிர், ICST சேவைகள் பணிப்பாளர் மாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.