Ads Area

அநுரவும், சஜித்தும் பொய்யான வாக்குறுதிகளால் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துவதை தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி ரணில்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) திறந்த மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்து சவால் விடுத்தார்.


சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவது சாத்தியமில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமாரதிஸாநாயக்க ஆகியோர் விலை குறைப்பு மற்றும் வரி குறைப்பு பற்றி தவறான வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றார்கள் இது நாட்டின் நிலைமையை மோசமாக்கும் வகையில் இருக்கிறது அத்தகைய மாற்றங்கள் மற்றுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


பொருட்களின் விலைகளை குறைக்கவும் வரிகளை குறைக்கவும் விரும்புகின்ற அதேவேளை, ரூபாவை பலப்படுத்துவதன் மூலமும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் மட்டுமே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உடனடியாக மாற்றுத் தீர்வுகளை முன்வைத்து சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்தைப் பெறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


சிறிகொத்தவில் நேற்று (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கயைில்,


“வரிகள் குறைக்கப்பட்டால் நாட்டுக்கு எவ்வாறு நிதியளிக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதை SJB மற்றும் JVP தெளிவுபடுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மாநில வருவாயை குறைப்பது நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கும்? பொய்யான வாக்குறுதிகளால் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துவதை தவிர்க்க வேண்டும். மூன்று தரப்பினரையும் உள்ளடக்கிய மின்னணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு மற்றும் எமது பொருளாதார மூலோபாயம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இந்த கலந்துரையாடலை பதிவு செய்து பொதுமக்களுக்கு வழங்குவோம்” என ஜனாதிபதி தெரிவித்தார்.


"IMF உடனான இந்த ஒப்பந்தத்தை மாற்ற முடியும் என்று நீங்கள் நம்பினால், IMF-ஐ நேரடியாக தொடர்பு கொண்டு அத்தகைய மாற்றத்தைக் கோருங்கள். கூடுதலாக, இலக்குகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், தேவையான வருமானத்தை எவ்வாறு உருவாக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை விளக்குங்கள். இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் தேவை. உங்களிடம் சாத்தியமான திட்டம் இருந்தால், அதை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்கவும். மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அந்த விவாதங்களின் முடிவுகளை நாட்டுடன் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் முன்மொழிகிறோம். இதன் மூலம் பொதுமக்களுக்கு உண்மை மற்றும் பொய்யை அறிய முடியும். அதன்பிறகு, யாராவது அதிருப்தி அடைந்தால், அவர்கள் தங்கள் கவலைகளை தெளிவாக தெரிவிக்கலாம். 


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe