Ads Area

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட நால்வர் ஆதரவு.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக மேலும் பல அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர்.


முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, சமகி ஜன பலவேகயவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரச்சாரச் செயலாளர் யு.எல்.எம்.என். முபீன் மற்றும் ஸ்ரீ டெலோ அமைப்பின் தலைவர் பரராஜசிங்கம் உதயராசா ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு 07 இல் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  தமது தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe