புத்தளத்தைச் சேர்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வ பயிலும் மாணவியான பைஸானா பைரூஸ் அவர்களின் தன்னெழுச்சியூட்டி தன்னம்பிக்கைகள் சுமந்து வரும் கவிதைத் தொகுப்பான டுவன்டி ப்ளஸ் 20+ நூல் வெளியீட்டு நிகழ்வானது தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை பல்கலைக்கழக ஒன்றுகூடல் மண்டபத்தில் கலை கலாசார பீடாதிபதி எம்.எம்.பாஷில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக துணைவேந்தர் யு.எல்.அப்துல் மஜீத் அவர்கள் கலந்து கொண்டதோடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் வெளியீட்டுரையை மூதுார் JMI Publication சார்பில் திருமதி. ஷக்ரா நவ்ஹல் நிகழ்த்தியிருந்தார்கள்.
மேலும் இந் நிகழ்வில் நூலாசிரியரும், இளம் கவிஞருமான புத்தளம் பைஸானா பைரூஸ் அவர்களுக்கு JMI Publication சார்பில் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.