குவைத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 6 பேருக்கு அரசு தரப்பு பொது வழக்கறிஞர்கள் மேற்பார்வையில் மத்திய சிறைக்குள் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதே போல் சபா அல்-சலைம் பகுதியில் வைத்து தனது நண்பரைக் கொன்றதற்காக இன்று தூக்கிலிடப்படவிருந்த குவைத் பெண், பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு இரத்தப்பணத்தை செலுத்த குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதையடுத்து கடைசி நிமிடத்தில் தண்டனையில் இருந்து தப்பினார்.
இது தவிர மற்றொரு ஒரு குவைத் பெண் உட்பட 3 குடிமக்கள், 2 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உட்பட 6 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதே போன்று கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கடைசியாக குவைத்தில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு குவைத்தில் மரணதண்டனை வழங்கபடுகிறது.
நேற்றைய தினம் குவைத் தினசரி செய்தி தளம் வெளியிட்டிருந்த செய்தியில் 8 பேருக்கு மரணதண்டனை என்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 8 ஆவதாக உள்ள ஒருவருக்கு ஏன் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை என்ற விபரங்கள் இன்றைய செய்தியில் வெளியிடப்படவில்லை.