சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் 22 மில்லியன் ரியால் நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வெளிநாட்டவர்களுக்கு சவூதி நீதிமன்றம் தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு ஒருவருக்கு 1 மில்லியன் SR அபராதமும், மற்றவருக்கு SR500000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்திய பிறகு குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தங்களது நிதி மோசடிக் குற்றங்கள் மூலம் சம்பாதித்த பணத்தை நீதிமன்றம் பறிமுதல் செய்ததாக சவுதி பிரஸ் ஏஜென்சி (Press Agency) தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் 177 நிதி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர், இதன் மூலம் SR22 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோதமாக பணம் சேகரித்துள்ளனர்.