அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் திகாமடுல்ல சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மற்றும் முன்னாள் சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர் கட்சியினால் தெரிவு செய்யப்பட்டு வேட்புமனுவிலும் கையெழுத்திட்டுள்ளார்.
சமூகப் பற்றிலும், கல்வியிலும், அரசியலிலும் ஆழ்ந்த புலமை கொண்ட வேட்பாளரான ஐ.எல். மாஹிர் மக்களோடு இணைந்து செயற்படும் திறன் மிகுந்த தலைவர் எனவும் சம்மாந்துறை மக்களும், இளைஞர்களும், தொகுதி மக்களும் அவரின் திறமையையும், அனுபவத்தையும் நிச்சயம் ஏற்றுக்கொண்டு அவரை வெற்றி பெறச் செய்வார்கள் எனவும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சி ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.