சம்மாந்துறை அன்சார்.
இயற்கை வளங்களையும், வன உயிர் குளங்களையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றி வலம் வந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார் வவுனியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன் தர்மலிங்கம்.
இன்றுடன் 107 நாட்கள் கடந்து மொத்தமாக 11,436 கிலோ மீட்டர் துாரம் வரை சைக்கிளில் கடந்து முழு இந்தியாவையும் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் இதற்கு முன்னரும் இலங்கையில் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
தற்போது அவர் இன்று வரை 107 Days. 11,436Km என்ற கணக்கில் கேரளா வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்தடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக பாண்டிச்சேரி சென்று அதன்பின்பு சென்னை மத்திய ரயில் நிலையத்தில் தனது பயணத்தின் இலக்கான 15000 கிலோமீட்டர் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.
இவரது சாதனைப் பயணத்தை பாராட்டி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இவருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி பொண்ணாடைகளும் போர்த்தி மாபெரும் கௌரவும் வழங்கப்பட்டுள்ளது.