தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக சட்டத்தரணி ரிஷாட் எம் புஹாரி தெரிவு செய்யப்பட்டு வேட்பு மனுவிலும் கையெழுத்திட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறைத் தொகுதியின் ஆரம்ப காலப் போராளியும், கட்சி விசுவாசியுமாகிய சட்டத்தரணி ரிஷாட் எம் புஹாரி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவின் வெற்றிக்கு பெரிதும் பாடுபட்டவராவார்.
இளையோர்களையும், படித்த, பண்பான, ஊழலற்ற, சமூக சிந்தனைகள் நிறையப் பெற்றவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு இணங்க சட்டத்தரணி ரிஷாட் எம் புஹாரி தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மாற்றத்தை விரும்பும் சம்மாந்துறை மக்கள் அவரை வெற்றி பெறச் செய்வார்கள் எனவும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.