நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனது கட்சியின் சொந்த சின்னமான மரச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அதற்கேற்ப கட்சியின் தலைமையினால் அந்தந்த பிரதேசத்திற்கு வேட்பாளர்கள் நிறுத்தும் பணியும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த வகையில் சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் இம் முறையும் நிறுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது காலத்திலிருந்து இன்று வரை கட்சியின் விசுவாசியாகவும், போராளியாகவும், இதுவரை கட்சி மாறாதா கொள்கைப் பிடிப்பாளருமாக அறியப்படும் வேட்பாளரான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களை இம்முறையும் மக்கள் தங்களது பிரதிநிதியாக அங்கீகரித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.