சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
Risad And Brothers அமைப்பின் அங்கத்தவர்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை வேட்பாளர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் தேர்தல் பணிகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.றிசாட் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று (19) இடம்பெற்றது.
இதன் போது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கொள்வதற்கான விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம்.சௌபீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பாளர் அர்ஷத் இஸ்மாயில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான எம் .எல். சுபைதீன், அசாருதீன் சலீம் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.