சம்மாந்துறை பிரதேச செயலக போதைபொருள் ஒழிப்புகுழு கூட்டம் நேற்று குழுவின் தலைவர் பிரதேச செயலாளர் S.L. முகம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் முன்னாள் அரசாங்க அதிபர் I.M.ஹனிபா ,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.பிரபாசங்கர், சுகாதார வைத்திய அதிகாரி Dr .M.M.நெளசாட் , உளநல வைத்தியர் Dr கசுன் கடுவல ,பிரதேச சபை செயலாளர் M.A.M.முகம்மட் , உலமா சபை தலைவர் மௌரவி M.L.M.Baseer , மஜிலிஸ் அஷ்சூராவின் செயலாளர் Dr. A.M.M.A.றசீட் ,இந்து ஆலயங்களின் ஒன்றிய செயலாளர் திரு T.காத்தவராயன், பி.செ.வெளிகள பிரிவின் தலைமை மு.சே உத்தியோகத்தர் திருமதி A.U.பசில், வலயக்கல்வி அலுவலக உளநல ஆலோசகர் Mr.அன்வர் ,சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர், சிறுவர் சீர்திருத்த உத்தியேகத்தர்,சமுக சேவை அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் Gafso அமைப்பின் பிரதிநிதி மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.