Ads Area

சமூகப் பணியும் தேசிய அபிவிருத்தியும்.

தொழில் வான்மையான சமூகப் பணியானது பயிற்சியையும் கல்வியையும் அடிப்படையாகக் கொண்ட பரீட்சமாகும். இது சமூக மாற்றம், சமூக நல்லிணக்கம், சமூக வலுவூட்டல் மற்றும் சமூக விடுதலையினை ஊக்குவிக்கிறது. சமூகப் பணியினுடைய மையங்களாக சமூக நீதிக்கான மூல தர்மங்கள் மனித உரிமைகள் மற்றும் கூட்டினைந்த பொறுப்பு மற்றும் பன்மைத் தன்மைக்கு மதிப்பளித்தல். இது சமூகப் பணி சமூக விஞ்ஞானங்கள் மற்றும் ஏனைய விஞ்ஞானங்களின் கோட்பாடுகளை தன்னகத்தை கொண்டு காணப்படுவதோடு பாரம்பரிய அறிவுக்கும் மதிப்பளிக்கிறது. சமூகப் பணியானது மக்கள் மற்றும் கட்டமைப்பு என்பவற்றினால் முகம் கொடுப்பதோடு வாழ்க்கையில் காணப்படும் சவால்களுக்கு முன் கொடுப்பதோடு மக்களுடைய நன்னிலையையும் மேம்படுத்துகிறது. 

                  

தேசிய அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் கருத்தாகும். இதில் நாட்டின் அனைத்து சமூகத்தினரும் சமமான வாய்ப்புகள் , சமூக சீர்திருத்தம், மற்றும் மனிதனுக்குரிய உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதும் அடிப்படை நோக்கமாகும். இந்த அபிவிருத்தி கல்வி, ஆரோக்கியம், பொருளாதார மற்றும் சமூக அறிவியல் முன்னேற்றங்களை உண்டாக்கும். 


கோட்பாடுகள் மற்றும் பரீட்சையும் என்றும் இரண்டு பரப்புகளிலும் அபிவிருத்தி பற்றிய கருத்தாடல்கள் முரண்படுவையாக உள்ளன. இவை சிக்கல் தன்மை வாய்ந்தவையாக உள்ளன. அபிவிருத்தியுடன் தொடர்புடைய எண்ணக் கரு மற்றும் செயல்முறை ரீதியான கருத்துக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சிக்கல் தன்மை காரணமாக இக்கட்டுரையானது தற்கால அறிஞர்களால் பெரிதும் முதன்மைப்படுத்தப்படும்.


" அபிவிருத்தி அடைந்து வரும் உலகில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தலே அபிவிருத்தியன் நோக்கமாகும்"


Smith (2003) கருத்துப்படி அபிவிருத்தி என்பதன் அர்த்தம் அவருக்கு நபர் வேறுபடுவதுடன் சில வேளைகளில் வெவ்வேறு நோக்கு நிலையிலிருந்தும் விவாதிக்கப்படலாம். இவரது கருத்துப்படி ஓரளவுக்கு நீண்ட கால அடிப்படையில் தளம்பல் இல்லாத தேசிய உற்பத்தியை 5% தொடக்கம் 7% ஆல் அதிகரிப்பதே பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. உண்மையில் இங்கு ஒரு நாடு அதன்  சனத்தொகை வளர்ச்சி வீதத்தினை விடவும் அதன் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை உயர்த்துவதே பொருளாதார அபிவிருத்தியாக பார்க்கப்படுகிறது எனினும் Desousal (1998) இன் கருத்துப்படி "ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமானது வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளின் சமூக அபிவிருத்தியை அளவிடுவதற்காக மனித அபிவிருத்தி சுட்டியை (HDI) பயன்படுத்துவதுடன் இது மனித சமூக மற்றும் பொருளாதார விடையங்களான ஆயுள் எதிர்பார்க்கை, எழுத்தறிவு வீதம், தலா வீத வருமானம் மற்றும் கொள்வளவு சக்தி என்பன பற்றியும் விவரிக்கிறது. 


எனவே சமூகப் பணி நோக்க நிலையில் அபிவிருத்தி என்பது சமூகம், பொருளாதாரம் போன்ற இரண்டு முக்கிய துருவங்களை முதன்மைப்படுத்துகிறது. பொருளாதாரம் என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்த உற்பத்தியை குறிப்பதோடு சமூகம் என்பது மக்கள் வாழ்க்கை தரம், உளப்பாங்கு மற்றும் சமூக நிறுவனங்கள், வழியாக நிறுவனங்கள் உடனான உறவுகள் என்பவை மேம்படுத்துவதாக அமைகின்றன. 


இவ் அபிவிருத்தியானது ஒரு தொடர்ந்து செல்லும் இயங்கியில் செயல்முறையாகவும், அதன் மூலம் மக்கள் தம்மை சமுதாயமாக இனம் கண்டு கொள்ளவும், தேவையான அறிவு, விழுமியங்கள், திறன்கள் என்பவற்றை பயன்படுத்தி தம்மை கூட்டாக வலுப்படுத்திக் கொள்ளவும், சமுதாய வளங்களை பகிர்ந்து கொள்ளவும், அவற்றை மேம்படுத்திக் கொள்ளவும், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களிடையேயும் நேர் சீரான நன்மையுடைய வைப்பதாக உள்ளது.


தேசிய அபிவிருத்தியில் சமூகப் பணியானது கீழ்வரும் விடயங்களின் ஊடாக செல்வாக்கை காணலாம் 


 வறுமை குறைப்பு.


வறுமையில் உள்ள மக்களை அடையாளம் காணுதல் அடிப்படை சேவைகளை வழங்குதலில் வசதி படுத்தல் இது சமுதாயப் பணியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


சமுதாய விழிப்புணர்வு.


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் உதாரணமாக அசாதாரண நிலைகளில் இருந்து மக்கள் மீள உதவிகள் பெற கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற அடிப்படை அம்சங்களை கடைபிடிக்கும் போது சமூகத்திற்கு ஒளியை பயக்கிறது.


ஆரோக்கியம் கல்வி.

 

சமூகப் பணியின் ஊடாக ஆரோக்கிய சேவை கல்வி நிறுவனங்களை எளிதில் கிடைக்க செய்ய உதவுகிறது.


எனவேதான் சமூகப் பணியானது நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது சமூகப் பணியின் ஊடாக நாட்டின் தேசிய அபிவிருத்தி அபிவிருத்தி அடைகிறது. 





பிரதீப் பிரசாந்தினி 

பொலன்னறுவை 

சமூகப்பணி இளங்கலை (சிறப்பு) பட்டப்படிப்பு, 

முதலாம் வருட மாணவி, 

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe