Ads Area

சவுதியில் இந்தியரை கொன்ற எகிப்து நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

சவுதியில் இந்தியா,கேரளா மாநிலம் மலப்புரம் கோட்டக்கல் பரப்பூரைச் சேர்ந்த குஞ்சலவி(45) என்பவரை கொன்ற வழக்கில் எகிப்து நாட்டை சேர்ந்த அகமது ஃபுவாத் என்ற நபருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கொலை கடந்த ஆகஸ்ட்-1,2021 அன்று ஜித்தாவில் நடந்தது.  


ஜித்தாவில் உள்ள அல்-மம்லகா என்ற நிறுவனத்தில் லாரி டிரைவரான குஞ்சலவி,கம்பெனிக்கு கிடைக்க வேண்டிய வசூல் பணத்தை கலைஷன் செய்துவிட்டு திரும்பும் வழியில் வாகனத்தில் ஏறிய குற்றவாளி அவருடைய கையில் பணம் உள்ளதை அறிந்து வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்து பணத்தை திருடிச் சென்றான்.


உடன் வேலை செய்கின்ற நண்பர்கள் அவர் தினமும் அறைக்கு வரவேண்டிய நேரத்தை கடந்தும் அறைக்கு வராத நிலையல் சந்தேகம் ஏற்பட்டு அவருடைய வாகனத்தை சோதனை செய்த போது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.


பின்னர் தப்பியோடிய எகிப்தியரை அதிகாரிகள் ஜித்தா விமான நிலையத்தில் கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையல் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக  சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe