குவைத்தில் இருந்து பெரும் துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று(02/01/2025) வியாழக்கிழமை காலையில் முதலாளியால் கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் வேலைக்காக பணிப்பெண்கள் காலையில் எழுகின்ற நேரத்திற்கு எழாத நிலையில் சந்தேகமடைந்து நடத்திய பரிசோதனையில் இந்த துயரமான சம்பவம் அவருக்கு தெரிய வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று இரவு காற்று புகாத அறையில் குளிர்காலம் என்பதால் வெப்பத்திற்காக நிலக்கரியால் நெருப்புப்படுக்கையினை மூட்டிவிட்டு படுத்த நிலையில் அதிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தூக்கத்திலேயே இந்த துயரமான சம்பவம் நடந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவ குழுவினர் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர், மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணை அதிகாரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை உள்ளிட்ட கூடுதல் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்ப உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்கள் 46, 54 மற்றும் 23 வயது உடையவர்கள். இவர்கள் குறிப்பாக எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. குளிர்காலத்தில் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் ஒவ்வோரு வருடமும் நடைபெறுவதால் பல உயிர்கள் தொடர்ந்து பறிபோகும் நிலையில் குவைத் சுகாதாரத்துறையின் செய்தி தொடர்பாளர் குளிர் காலத்தில் செய்ய கூடாத தவறுகள் தொடர்பான விழிப்புணர்வு செய்தியை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.
நீங்கள் வேறு எந்த செய்தியை Share செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து குவைத் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்த யார் இந்த செய்தியை படித்தாலும் கண்டிப்பாக உங்களுடைய வளைகுடா நண்பர்களுக்கு Share பண்ணுங்க பலருக்கும் இப்படி ஒரு பிரச்சனையால் மரணம் ஏற்படும் என்பதே தெரியவில்லை.
நன்றி - அரப் தமிழ் டெய்லி.