குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த டாஃப்னி நகலபன் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் கொன்று புதைக்கப்பட்ட செய்தி வெளிநாட்டினரான அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த கொலை தொடர்பான செய்தி கடந்த சில நாள்களுக்கு முன்பாக வெளியாகியிருந்த நிலையில். இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றன. கிருஸ்துமஸை முன்னிட்டு டிசம்பரில் வீடு திரும்புவதன் மூலம் தனது குடும்பத்தை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டிருந்த டாஃப்னி நகலபன் என்ற பிலிப்பைன்ஸ் வீட்டுப் பணிப்பெண், குவைத்தில் கொடூரமாக கொலை செய்யபட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே புதைக்கப்பட்டார். இரண்டு மாதங்களாக இவரை காணவில்லை என்று விசாரணையும் நடைபெற்று வந்தன.
நகலபனின் சகோதரி மைக்கேல் லென்சஹான் மே 2024 இல் அவர்களின் கடைசி உரையாடலின் போது வீடு திரும்புவதாக உறுதியளித்தார், அந்த நேரத்தில் அவர் கொடுமை படுத்தப்பட்ட அறிகுறிகள் எதுவும் அவளிடம் தெரியவில்லை என்றார். டாஃப்னி நகலபனின் சிதைந்த உடலின் எச்சங்கள் கொலையாளியின் வீட்டின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துறை(DMW) மற்றும் வெளியுறவுத் துறை(DFA) ஆகியவை குவைத் அதிகாரிகளுடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கொலை செய்த நபர்(குவைத் நாட்டவர்) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றத்தை மறைக்க உதவியதாக நம்பப்படும் உறவினர் ஒருவரும் விசாரணையில் உள்ளார்.
டாஃப்னி நகலபனிக்கு நீதி கிடைக்கும் வரையில் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மற்றும் வெளியுறவுத் துறை செய்யும் என்றும், விசாரணை நடைபெற்று வருவதால் உடல் குவைத் அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் உள்ளது என்றும் விரைவில் தாயகம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே குவைத்தியான முதலாளியின்(Sponsor) தன்னை துன்புறுத்தியதாக அவருடைய ஒன்றரை வயது குழந்தையை பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவர் வாஷியின் மெஷினில் போட்டு கொலை செய்ததாக மற்றொரு வழக்கிலும் குவைத்தில் விசாரனை நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஒரு வாரமாக குவைத்திலுள்ள அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.