இன்று 2025. 01.01 சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் புதிய கட்டிடத்தினை மக்கள் பாவனைக்கு திறந்து விடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயும் களப் பரிசீலனை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வசந்த பியதிஸ்ஸ மற்றும் சட்டத்தரணியும், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறையின் முக்கியஸ்தருமான றிஷாட் எம் புஹாரி ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்று நடைபெற்றதுடன்.
இதன் போது கண்டறியப்பட்ட பிரச்சினைகள் மிக விரைவில் தீர்த்து வைக்கப்படுவதுடன் மக்கள் பாவனைக்காக புதிய கட்டிடம் ( Chinese Building) கையளிக்கபட நடவடிக்கை எடுக்கப்பட்டது.