தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய பிரதேச செயலக கலை இலக்கிய விழாவும், பட்டறை இலக்கிய மலர் வெளியீட்டு விழாவும் நேற்று (31)கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி எம்.மூஸாவின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB), நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல், இலக்கிய அதிதியாக முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ காதர்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே றினோஸா,பிரதேச செயலக கிளைகளின் பிரதம முகாமைத்துவ உதவியாளர்கள்,துறைசார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சம்மாந்துறை வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ.ஹக்கீம்,கலாசார அதிகார சபையின் உப தலைவர் எம்.எல் இஷ்சாக்,பிரதம உட்பட இன்னும் பல பிரதேசத்தின் மூத்தகலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கலை,கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் பரிசில்களும், கெளரவிப்புக்களும் இடம்பெற்ற்துடன்,சுவதம் கலைஞர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.