சம்மாந்துறை அல் மர்ஜான் தேசிய பாடசாலையின் சுற்றாடல் கழக மாணவிகள் அண்மையில் (08) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களை சந்தித்து தங்களது பாடசாலையில் சுற்றாடல் கழகத்தினால் இடம்பெற்ற வேலைத்திட்டங்கள் சம்மந்தமாகவும்,இனிவரும் காலங்களில் சுற்றாடல் கழகத்தினால் நடைபெற இருக்கும் வேலைத்திட்டங்கள் சம்மந்தமாகவும் மாணவிகளினால் பிரதேச செயலாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் அடைவு முன்னேற்ற நடவடிக்கைகள் சம்மந்தமான பாராட்டு பத்திரங்களும் பிரதேச செயலாளரினால் மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.