Ads Area

சம்மாந்துறையில் அல் - மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்தின் 6ஆவது கைர் கிளை திறப்பு!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அல் - மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சம்மாந்துறையில் இயங்கிவருகிறது. 6 ஆவது கைர் கிளை திறக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (10) மாலை 04.15 மணியளவில் கைர் பள்ளிவாசலில் திறக்கப்பட்டது.


இதன் போது, குறித்த இடத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு அல் - மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் ஐ.எம். இப்றாகீம் இந்நிறுவனம் பற்றி விரிவாக விளக்கப்பட்டது.


இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் ஐ.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.எல்.எச். பசீர் மதனி, மஜ்லிஸ் அஷ்ஷுறா அமீர் அல்ஹாஜ் எம்.ஐ. அமீர் நளீமி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்‌.எம். ஹனீபா, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. வேல்வேந்தன், அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்தின் செயலாளர் அல்ஹாஜ் கே.எல் அல் அமீன், தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் முப்தி எஸ்.எல்.எம். றிஸ்வான் ஹக்கானி, கைர் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe