சம்மாந்துறை மபாசா வித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தியெய்து 5 மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். மபாசா வித்தியாலய வரலாற்றில் ஒரே தடவையில் 5 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனடிப்படையில்,
எம்.ஆர் .அப்துள்ளா 151 புள்ளிகள்.
ஏ.எச். .அலீனா அசானி 150 புள்ளிகள்.
எப் .லிபா செய்னப் 149 புள்ளிகள்.
எப்.எப். ஹிபா 142 புள்ளிகள்.
எம்.எஸ் .சீறத் ஹானி 139 புள்ளிகள்
ஆகிய மாணவர்கள் மாபெரும் சாதனை படைத்து மபாசா பாடசாலைக்கும், கற்பித்துக் கொடுத்த ஆசிரியர் எம்.எல்.அமீர் அவர்களுக்கும், ஏனைய ஆசியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு பூ மாலை அணிவித்து அவர்களை பாடசாலை நிர்வாகத்தினர் பாராட்டியுள்ளனர்.
பாடசாலையின் அதிபர் கே.கே. அஹமத் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மபாசா பாடசாலையின் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, வழிகாட்டிய ஆசிரியர் எம்.எல். அமீர் அவர்களும் மற்றும் தரம் - 01 தொடக்கம் தரம் - 05 வரை கற்பித்த ஏனைய ஆசியர்களும், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை மபாசா பாடசாலையானது அண்மைக் காலமாக கல்வியில் முன்னேற்றம் கண்டு வரும் ஒரு பாடசாலையாகவும், நகர்புற பாடசாலைகளோடு போட்டி போட்டு மிகவும் சிறப்பான அடைவுகளைப் பெற்று வரும் ஒரு பாடசாலையாகவும் விளங்குகிறது குறிப்பிடத் தக்கதாகும்.