Ads Area

வீதிப்பெயர் விளம்பரப்பலகைகள் அகற்றப்பட்டமையினால் மக்கள் சிரமம்.

 பாறுக் ஷிஹான்.


வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட விளம்பரப்பெயர்ப் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன.


அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின் விளம்பரப்பலகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.


மேற்படி விளம்பரப்பலகைகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், தெளிவற்றதாக இடங்களின் பெயர்களும் கடந்த காலங்களில் காணப்பட்டதை ஆர்வலர்கள் சிலரால் சமூக ஊடகங்களில் வெளிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு பெயர்ப்பலகைகள் திடீரென அகற்றப்பட்ட போதிலும் தற்காலிகமான எந்தவொரு ஏற்பாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவில்லை.


இதனால் வெளியிடங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


எனவே, வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக இவ்விடயத்தில் நடவடிக்கையெடுக்க வேண்டும்ர்ன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe