சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
"ஏ.எம்.எம்.நௌசாத் பாராளுமன்றத்தில்" எனும் நூல் வெளியீடு விழா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌசாத் தலைமையில் நேற்று (26) புதன்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் நூல் ஆய்வுரையை வழங்கினார். அத்துடன், நூலின் முதல் பிரதியினை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், தென் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், மன்னார் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா, கிழக்கு மாகாண முன்னாள் கல்விப்பணிப்பாளர் மன்சூர், பிரதேச சபை செயலாளர் அல்ஹாஜ் எம்.ஏ.கே. முகம்மட், சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல் கஜன், மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனீபா, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.