சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள சிக்னல்களில் 8 சிறார்களை பிச்சையெடுக்க வைத்து சம்பாதித்த எமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் பிச்சையெடுப்பது, அதற்கு சிறார்களைப் பயண்படுத்துவது, சட்டவிரோதமாக நிதி சேகரிப்பது போன்ற அனைத்தும் தண்டனைக்குறிய குற்றமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.