Ads Area

அக்கரைப்பற்று அகத்திக்குள பிரதேச வயலில் உழவு இயந்திரக்கலப்பையில் சிக்கி பலியான 16 வயது இளைஞன்.

 பாறுக் ஷிஹான்.


வயலில் உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து சுழல் கலப்பையில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அகத்திக்குளம் பிரதேச வயலில் இடம்பெற்றுள்ளது.


நேற்று சனிக்கிழமை (22) மேற்படி பகுதியில் உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து  16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்தார்.


இவ்வாறு உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெ.ஜீரோசன் என அடையாளங்காணப்பட்டார்.


குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன், இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையிலிருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.


இந்நிலையில், உழவு இயந்திரச் சாரதியாக வேண்டுமெனும் ஆசையில் நெருங்கிய நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சியெடுத்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


அத்துடன், உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe