அக்கரம் முஹம்மட்.
இம்முறை சம்மாந்துறை பிரதேசசபை தேர்தலில் போட்டியிடுகின்ற வேர்ப்பாளர்களுக்கு ஒரு பகிரங்க சவால் யார் உங்களில் முதுகெலும்புள்ள தவிசாளர்.
1. கண்ட நிண்ட இடமெல்லாம் மீன் மார்க்கட்டாக இருக்கும் சம்மாந்துறையை உங்களால் ஒழுங்கமைக்க முடிந்ததால் நீங்கள் ஒரு முதுகெலும்புள்ள தவிசாளர்.
2. ஒரு கிலோ மாட்டிறைச்சியை இவ்வளவு ரூபாவுக்தகுதான் விற்பனை செய்யவேண்டும் என்ற நிபாந்தனையுடன் இறைச்சிக்கடைகளுக்கான விலைமனுவை கோரமுடியுமாக இருந்தால் நீங்கள் ஒரு முதுகெலும்புள்ள தவிசாளர்.
3. வீதியோரங்களில் போக்குவரத்த்துக்கு சிரமமாக காணப்படும் வீதியோர வியாபாரத்தை ஒரு ஒழுங்கமைப்பின்கீழ் கொண்டுவரமுடியுமாக இருந்தால் நீங்கள் ஒரு முதுகெலும்புள்ள தவிசாளர்.
4. பிரதேசசபை நிறுவகத்தின் கீழுள்ள Concreate போடப்பட்டு சில வருடங்களுக்குள்யே கம்பி வேறு கல் வேறு மணல் வேறு என்று காணப்படும் வீதிகளில் நடந்த ஊழல்களை வெளியில் கொண்டுவந்தால் நீங்கள் ஒரு முதுகெலும்புள்ள தவிசாளர்.
5. ஒவ்வரு கோழி கடையிலும் ஒவ்வொரு விலை அதிலும் கடைக்கு வெளியில் ஒரு விலை கடைக்கு உள்ளே வேறு விலை, இவ் விலை குளறுபடிக்கு ஒரு முடிவு கட்ட முடியுமானால் நீங்கள் ஒரு முதுகெலும்புள்ள தவிசாளர்.
6. ஒரு அகீகா அல்லது சதகா போன்ற விடையங்களுக்காக ஒரு மாட்டை அறுக்கின்ற போது பிரதேசசபையின் அனுமதிக்காக விண்ணப்பித்தால் மிருக வைத்தியர் குடிமரைக்கார் பள்ளிநிருவாக்கத்தார் போன்றவர்களிடம் ஒப்பம் வாங்கும் போலியான நடவடிக்கைகளை ரத்து செய்ய முடிந்தால் அல்லது குறித்த விடையத்தை உண்மையாகவே நடைமுறைப்படுத்த முடிந்தால் நீங்கள் ஒரு முதுகெலும்புள்ள தவிசாளர்.
7. ஊரில் உள்ள தனியார் கல்விக் கூடங்களில் பெண்பிள்ளைளுக்கு தொந்தரவு செய்யும் இளம் காவாலிகளை பொலிஸாரின் உதவியுடன் அடக்க முடிந்தால் நீங்கள்தான் முதுகெழும்புள்ள தவிசாளர்.
08. ஊரில் உள்ள உணவகங்கள், முடிதிருத்தும் நிலையங்களில் சுத்தம்-சுகாதாரத்தை கடைப்பிடிக்க வழிவகுத்தால் நீங்கள்தான் முதுகெழும்புள்ள தவிசாளர்.
இதுபோன்ற இன்னும் பல ஊர்ச் சீர்திருத்த விடையங்களை உங்கள் தேர்தல் விஞ்ஞாபணத்தில் சேர்க்க முடிந்தால் உங்களால் இதுபோன்ற விடையங்களை பகிரங்கமாக பொதுமேடைகளில் பிரச்சாரம் செய்யமுடிந்தால் நீங்களே முதுகெழும்புள்ள தவிசாளர்.