இம் முறை நடைபெறவுள்ள உள்ளுராச்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சி சார்பில் சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தில் போட்டியிட 3 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில் நிர்வாக உதவியாளராக பணிபுரியும் முஹம்மட் ரிஷாட், சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரம் முஹம்மட் சுபைடீன் மற்றும் எம்.ஏ.சி. உவைஸ் ஆகிய 3 வேட்பாளர்களையே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இம்முறை வீரமுனை வட்டாரத்தில் களமிறங்கியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் முன்னிலையில் இம் மூவரும் தங்களது வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.