Ads Area

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் பொறுப்பேற்றார்.

 ( வி.ரி.சகாதேவராஜா) 


கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைநேற்று செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 


இளம் வயதில் ( 50 வயது) பதவியேற்கும் பேராசிரியர் பிரதீபன் 12.10.1974 இல் பிறந்தவராவார். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு மண்ணில் இருந்து தெரிவான முதல் துணைவேந்தர் பேராசிரியர் பிரதீபன் ஆவார். காரைதீவைச்சேர்ந்த மறைந்த டாக்டர் பரராஜசிங்கம் லில்லிமலர் தம்பதியினரின் ஏக புத்திரன் அவர். இவரது நியமனத்தில் காரையூர் மண் மற்றும் ஒரு பெருமையடைகிறது. கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 ஆவது உபவேந்தராக முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் குறித்த பல்கலைக்கழகத்தின் 11 வதுஉபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாத்திற்கு முன்னர் பல்கலைகழகத்தில் இடம்பெற்றது.  


இதில் 8 பேர் களமிறங்கிய நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர்பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர். இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ள முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 வது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை செவ்வாய்க்கிழமை (17) அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து புதிய உபவேந்தர் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe