( வி.ரி. சகாதேவராஜா)
இரண்டாவது காலாண்டிற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் எவ்.நிஸார்டீன் மற்றும் கிழக்கு மாகாணக் கணக்காய்வு உத்தியோகத்தர் எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலைகளில் அவதானிக்கப்படும் ஐயவினா தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டது.
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் சீ.திருப்பிரகாசம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வை.அரபாத் முகைடீன் , திருமதி நுஸ்றத் நிலோபறா, பி.பரமதயாளன் ஏஎம்எம்..சியாத், கோட்டக் கல்விப்பணிப்பாளர் மஹ்மூத் லெவ்வை மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.