தரையில் இருந்து 35,000 அடி உயரத்தில் ஒரு உலோக குழாயினுள் தெரியாத நபர்களை நம்பி உங்களுடைய வாழ்க்கையை ஒப்படைத்து விமானத்தில் பறக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
பிளைட் ஆன்சைட்டி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விமான பயணத்தின்போது ஏற்படும் பதட்டம் என்பது புதிதான ஒன்று கிடையாது. ஆனால் தற்போது அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்கு பிறகு இந்த பிளைட் ஆன்சைட்டி என்பது மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
பிளைட் ஆன்சைட்டி என்றால் என்ன?
பிளைட் ஆன்சைட்டி என்பது விமானத்தைப் பற்றியது மட்டும் கிடையாது. அது நமக்குள் ஏற்படும் வலுவிழந்த ஒரு உணர்வு. தரையில் இருந்து 35,000 அடி உயரத்தில் ஒரு உலோக குழாயினுள் தெரியாத நபர்களை நம்பி உங்களுடைய வாழ்க்கையை ஒப்படைத்து விமானத்தில் பறக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்த பயத்தை வெளிப்படுத்த பெரும்பாலானவர்கள் சத்தம் போட்டு கூச்சலிடுவது கிடையாது. எனினும் அவர்களுடைய இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். முதல் நாள் இரவு தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பார்கள்.
காரணத்தை கண்டறியவும்:
உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் எதுவென்பதை சரியாக கண்டுபிடித்து அதனை எதிர்ப்பதற்கு தயாராகுங்கள்.
ஆழமாக சுவாசிக்கவும்:
உங்களுடைய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதற்கு கட்டுப்படுத்தப்பட்ட மூச்சு பயிற்சியை நீங்கள் செய்யலாம். இதற்கு 4 எண்ணிக்கையில் மூச்சை பொறுமையாக உள்ளிழுத்து, 4 எண்ணிக்கைக்கு அதனை அப்படியே வைத்திருந்து, பிறகு 6 எண்ணிக்கைக்கு மூச்சை பொறுமையாக வெளியேற்றவும்.
உங்களுடைய ப்ளேலிஸ்டை ஆன் செய்து இசை கேட்பது, பாட்காஸ்ட் கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது அல்லது திரைப்படங்களை காண்பது போன்றவற்றில் உங்களுடைய கவனத்தை மாற்றவும்.
காஃபைன் மற்றும் மதுபானத்தை தவிர்க்கவும்:
இந்த இரண்டுமே பதட்டத்தை மோசமாக்கும். எனவே எப்போதும் தண்ணீர் அல்லது அமைதி அளிக்கும் ஹெர்பல் டீ வகைகளை தேர்வு செய்யவும்.
கிரவுண்டிங் டெக்னிக்:
அதாவது நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கால்களை தரையில் அழுத்தி வைத்து, கைகளை இதயத்தின் மீது வைக்கும் போது ஒருவித அமைதி கிடைக்கும். உங்களுடைய உடலின் எடையை உணருங்கள். இந்த அடிப்படை செயல்பாடுகள் உங்களுடைய நரம்பு அமைப்புடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்.
விமான குழு உடன் பேசவும்:
உங்களுக்கு இப்படி ஒரு பதட்டமான நிலை இருக்கிறது என்பதை அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் நீங்கள் தெரிவித்து, அவர்களுடைய உதவியை நாடலாம்.
மருத்துவ உதவியை பெறுங்கள்:
ஒருவேளை உங்களுடைய பதட்டம் மிகவும் தீவிரமானதாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் இதற்காக குறுகிய கால மருந்துகள் அல்லது வேறு விதமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காரணத்திற்காக நீங்கள் பயணம் செய்வதையே தவிர்க்கிறீர்கள் அல்லது பயணம் செய்வதற்கு முந்தைய நாள் உங்களால் தூங்க முடியாவிட்டால் இது உங்களுடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்கலாம். எனவே இந்த பயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அதற்கான சிகிச்சையை நீங்கள் பெற வேண்டும்.