சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
பொது மக்களுக்கு துரித சேவையினை வழங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கையும், அதற்கான தேவைப்பாடுகளையும், உத்தியோகத்தர்களின் கருத்துக்களும் கேட்டறிந்துகொண்டதுடன், கட்சி பேதமின்றி பொது மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை
0672030800.