Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன் - வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர்.

 (வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு  நேற்று (15) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்  தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.


தவிசாளர் மாஹிரின் கன்னி உரையில்..


இவ் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சபைக்கான வருமானம் 58 மில்லியன் ரூபாய் ஆனால் செலவு 76 மில்லியன் ரூபாய் அதில் அமைய ஊழியர்களுக்கு 28 மில்லியன் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. எனவே சபை வருமானத்தை அதிகரிக்க அனைவரும் கவனமெடுக்கவேண்டும்.


அமைய அடிப்படையில் பணியாற்றும் எமது ஊழியர்களுக்கு மாதம் 47 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கி வருகின்றது.


உண்மையில் அமைய ஊழியர்கள் நிரந்தரமானால் சம்பளத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். அந்த நிலை இங்கு இல்லாதது கவலை.


நான் தவிசாளராகி இரு மாதங்களாகின்றன இதுவரை ஒரு சதமேனும் சபை நிதியில் எடுக்கவில்லை. முன்னாள் தேடி வைத்த நிதியை நான் செலவழிப்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். உண்மையை உலகறியும் என்றார்.


அதன் பின்னர் உப தவிசாளர் வி.வினோகாந்த் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கன்னி உரையாற்றினார்கள்.


ஹஜ் கடமைக்காக சென்ற பொழுது மதீனாவில் மரணித்த சம்மாந்துறை பிரதேச சபையிலன் முன்னாள் உப தவிசாளர் அச்சி முகமட் அவர்களுக்கு சபையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பார்வையாளர்கள் கல்வியில் பாடசாலை மாணவர்கள் ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe