Ads Area

சம்மாந்துறை மத்திய கல்லூரி கபடி வீரர்களுக்கான Jersey அறிமுக நிகழ்வு

 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 2025ம் ஆண்டு STR-MMMV சார்பாக கிழக்கு மாகாணம் சம்மாந்துறை வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 17 வயதுப்பிரிவு கபடி அணிக்கு உத்தியோகபூர்வ Jersey வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வு பாடசாலையின் முதல்வர் எம்.ரீ.எம்.ஜனோபர் (SLEAS) தலைமையில் பிரதி, உதவி அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர்களும் கலந்து கொண்டு வீரர்களுக்கான மேலங்கிகளை வழங்கி வைத்தனர்.


இவ்வணியின் பங்கேற்பு, பாடசாலையின் விளையாட்டு வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாகவும் மாணவர்களின் ஆற்றலினை வெளிக்கொணரும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


மாகாணமட்ட கபடி போட்டிகள் யாவும் எதிர்வரும் ஜூலை 02, 03 ஆகிய தினங்களில் நிந்தவூர் MAC Sports Park உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.


தகவல்:

STR-MMMV Physical Education Unit.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe