சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(29) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமாலெப்பை,கே.கோடிஸ்வரன், எம்.எஸ் அப்துல் வாசீத்,சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர்,ஏ.எம்.எம் நெளசாத்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,கணக்காளர் எ.எஸ்.எல் சர்தார் மிர்ஸா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இலங்கை மின்சார சபைக்கு நிரந்தரமாக அல் மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச நிலத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது அத்தோடு சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் வீதி பிரச்சினைகள்,வீதி மின் விளக்கு சார்ந்த பிரச்சினைகள்,சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், அல் அமீர் பாடசாலையில் உள்ளக அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள்,வீரமுனை இந்துமயான பிரச்சினைக்கான தீர்வு,சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பெளதீக மற்றும் உள்ளக சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்,விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள்,நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும்.தீர்வுகளும், கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதோடு இன்னும் பல முடிவுகளும் எடுக்கப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும்.