பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் "நில செவன"கட்டிட புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குள் நான்கு கட்டிடங்கள் புனரமைப்பு மேற்கொள்வதற்கு அமைச்சினால் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் புனரமைக்கப்பட்டு வரும் "நில செவன" கட்டிட வேலைகளை அண்மையில் (07) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாசீர்,சம்மாந்துறை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மது அஸ்லம்,ஆகியோர்களால் மேற்பார்வை செய்யப்பட்டது.
இவ் கள விஜயத்தின் போது மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அற்புதன், சம்மாந்துறை பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.ஜே.எம் ரிஸ்வான்,கிராம சேவகர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிராமங்களில் உள்ள மக்கள் அரசாங்க சேவைகளை ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் கட்டிட வேலைத்திட்டத்தனை துரிதப்படுத்துமாறு சம்மாந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களினால் பணிப்புரை வழங்கப்பட்டது.
இவ் நில செவன திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் புளோக் ஜே வெஸ்ட் -2, செந்நெல் கிராமம்-1,2, மல்வத்தை-02 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இவ் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.