சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராம சேவகர் பிரிவுகளில் இவ் வருடம் தெரிவு செய்யப்பட்ட 08 பயனாளிக்களின் வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும், வீடு கட்டுவதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் அண்மையில் (07) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் மல்வத்தை கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாசீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மது அஸ்லம்,மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அற்புதன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ ரக்கீபா,எம்.என்.எம் சசீர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.ஜே.எம் ரிஸ்வான்,கிராம சேவகர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இவ் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 4 வீடுகளும் 0.9 மில்லியன் நிதியில் 4 வீடுகளும் அமைப்பதற்கு அமைச்சு மட்டத்தில் அனுமதி வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.