சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை 12 கிராமச் செவகர் பிரிவின் ஊடாக (சம்மாந்துறை - அம்பளாந்துறை வீதி) செல்லும் S24 வாய்க்கால், கடந்த காலங்களில் முன்னெடுத்துச் சென்ற அபிவிருத்தி வேலை காரணமாக, நீரோட்டத்திற்கு போதிய இடமின்றி, வெள்ளப்பெருக்கிற்கு முகங் கொடுக்க முடியாமல் போனதால், மக்கள் சொல்லொணாத துயரங்களை சந்தித்தனர்.
இந் நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் பிரதேச மக்கள் வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் காலித் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை அடுத்து அவர் குறித்த S24 வாய்க்காலினை துாய்மைப்படுத்தி, விசாலமாக்கி, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தடுப்புக்கான பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இப் பணியினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களும், வட்டார பிரதிநிதிகளான கௌரவ உறுப்பினர் ஏ. ஆர். ஆசிக், கௌரவ உறுப்பினர் ரிஸ்விகான், சம்மாந்துறை மத்தி கௌரவ உறுப்பினர் ஏ. அப்னான் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் திரு வேல் கஜன் அவர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.