Ads Area

அபுதாபி மற்றும் சவுதி மதீனா பகுதிகளில் இடம் பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மரணம்.

அபுதாபியில் நேற்று (04/01/26) காலையில் நிஷான் வகையை சேர்ந்த கார் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கரமான சாலை விபத்தில் இந்தியர்களான ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண் குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 


மேலும் இந்த குடும்பத்தினர் வீட்டில் வேலைக்காக நின்ற வீட்டு பணிப்பெண் அவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர்களுடைய தாய், தந்தை மற்றும் ஒரு மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துபாயில் Business Man ஆக உள்ள கேரளா கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் லத்தீப் அவருடைய குடும்பமே விபத்தில் சிக்கியது.


இதேபோல் அண்மையில் (03/01/25) சவுதியின் மதீனா அருகே நடந்த சாலை விபத்தில் கேரளா மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல் என்ற நபரும் அவருடைய குடும்பமும் விபத்தில் சிக்கினர். 7 பேர் அடங்கிய குடும்பம் மதீனா செல்வதற்காக விசிட் விசாவில் சவுதி அரேபியாவிற்கு வந்திருந்தபோது விபத்து ஏற்பட்டது. 


இவர்கள் பயணித்த கார் லாரியுடன் மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் அப்துல் ஜலீல் அவருடைய மனைவி, மகன் மற்றும் தாய் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பெண் குழந்தைகள் மதீனாவில் உள்ள கிங் ஃபஹத் மற்றும் சவுதி ஜெர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe