Ads Area

சவுதி அரேபியாவில் 684 தொழில்முறை அங்கீகாரம் இல்லாத போலி இன்ஜினியர்கள் கண்டுபிடிப்பு.

செல்லுபடியாகும் தொழில்முறை அங்கீகாரம் (Professional Accreditation) இல்லாமல் பணிபுரிந்த 684 பொறியாளர்களை சவுதி பொறியாளர் கவுன்சில் (Saudi Council of Engineers) கண்டறிந்துள்ளது.


இந்த பொறியாளர்கள் ரியாத், அல்-கோபர் மற்றும் தம்மாம் நகரங்களில் செயல்படும் 10 பெரிய ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் திட்ட மேலாண்மை நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். இந்த விதிமீறல்களின் காரணமாக, கவுன்சில் மொத்தம் 16 லட்சம் சவுதி ரியால் (SR1.6 million) அபராதம் விதித்துள்ளது.


நடத்தப்பட்ட விசாரணையில், பல பொறியாளர்கள் தங்களது தொழில்முறை அங்கீகாரம் காலாவதியான பின்னரும் தொடர்ந்து பணியாற்றி வந்தது தெரியவந்தது. இந்த மீறல்கள், கவுன்சில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வு (Inspection) நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டன.


அனைத்து பொறியாளர்களும் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், செல்லுபடியாகும் தொழில்முறை அங்கீகாரத்தை வைத்திருப்பது சட்டப்படி கட்டாயம் என கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. 



தகவல்  - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe