நிந்தவூர் பிரதேச சபை ஊடாக மக்களுக்கு சேவை செய்யும் இந்த வாய்ப்பை நான் மிகுந்த பொறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.
நிந்தவூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நல்ல சுகாதாரமான சூழல், சிறந்த அடிப்படை வசதிகள் மற்றும் வலுவான பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்.
நமது சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை உறுதி செய்வதுடன், ஒவ்வொரு குடிமகனின் நலனையும் பாதுகாப்பதே எனது முக்கிய நோக்கமாகும்.
எனக்கு இந்த நம்பிக்கையையும் வாய்ப்பையும் வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வழிகாட்டல்களையும் தொடர்ச்சியான ஆதரவையும் வழங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணத்தின் தலைசிறந்த சபையாக நிந்தவூர் பிரதேச சபையை உயர்நிலைப்படுத்திய அரசியல் ஆளுமையான அஷ்ரப் தாஹிர் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் தவிசாளர் தெரிவு கூட்டத்தில் கலந்து கொண்டு, ஊரின் நலனுக்காகவும் வாக்களித்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தெரிவை சாத்தியமாக்க முக்கிய பங்காற்றிய ஷாபி சுலைமான் அவர்களுக்கு எனது விசேட நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்தத் தெரிவில் கலந்து கொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், எங்களை ஆதரித்து வந்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் நிந்தவூர் மக்களின் நலனுக்காக அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.
கட்சி வேறுபாடுகள், அரசியல் பழிவாங்கல்கள், வாக்களித்தோர் – வாக்களிக்காதோர் என்ற எந்தப் பாகுபாடுகளும் இன்றி, எனது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்க இறைவனை முன்நிறுத்தி சாட்சியமளிக்கின்றேன்.
நிந்தவூர் பிரதேச சபையின் சகல கட்சி உறுப்பினர்களையும் இணைத்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று நீதியான ஆட்சியை நிலை நாட்டுவதற்கும் முழுமையாக மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்பதற்கும் தயாராக இருக்கின்றேன்.
நான் தவிசாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்நிலையில், ஊரின் மிக முக்கியமான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வு திட்டங்களை வகுத்துள்ளேன் என்பதையும் முதற்கட்டமாக அறிவிக்கின்றேன்.
“வளமான ஊர் – நிலையான விருத்தி” என்ற எங்கள் பயணம் தொடரும்.
சட்டத்தரணி றியாஸ் ஆதம்
தவிசாளர்
நிந்தவூர் பிரதேச சபை

